கத்தோலிக்கத் திருச்சபையைச் சீர்திருத்த அனுமதித்த பாப்பரசர்
- minnalparithi
- Mar 26
- 1 min read

கத்தோலிக்கத் திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ள பரிசுத்த பாப்பரசர் இதன் மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தனது பதவியில் தொடர்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரான்சின் ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவா் அங்கிருந்தவாறே சீர்திருத்த தி;ட்டங்களிற்கு அனுமதி வழங்கும் ஆவணத்தில் கைச்சாத்திட்டார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 14 முதல் பாப்பரசர் மருத்துவமனையில் உள்ளார். கடந்த 12 வருடகாலப்பகுதியில் அவர் நீண்டநாட்கள் மருத்துவமனையில் உள்ளமை இதுவே முதல் தடவை.
கத்தோலிக்கத் திருச்சபையில் பெண்களிற்கு அதிகளவு பங்களிப்பினை வழங்குவது,ஆட்சி மற்றும் தீர்மானம் எடுப்பதில் பாமர மக்களை அதிகளவில் சேர்ப்பது உட்பட பல சீர்திருத்தங்கள் குறித்து கத்தோலிக்கத் திருச்சபை ஆராயவுள்ளது.
இந்த சீர்திருத்தங்களை ஆயர்கள் பேரவை என்ற அமைப்பு ஆராயும்.பரிசுத்த பாப்பரசர் தனது பதவிக்காலத்தில் பணி நிகழ்ச்சி நிரலை இந்த குழு மூலமே முன்னெடுத்துவருவார். சமீபகாலமாக பாப்பரசர் தனது புதுப்பித்தல் செயற்பாட்டில் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களை ஈடுபடுத்த முயன்றுவந்துள்ளார்.
இதேவேளை பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரது படத்தை முதல்தடவையாக வத்திக்கான் வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள தேவாலயத்தில் பாப்பரசர் திருப்பலியை நிறைவேற்றினார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.
Comentarios