ஒரே நாளில் தங்கத்தில் பரபரப்பான எழுச்சி – இப்போது வாங்கலாமா? காத்திருக்கலாமா?
- minnalparithi
- Apr 10
- 1 min read

பங்குகள், மியூச்சுவல் பண்ட்கள், ஈடிஎப்கள் போன்ற சிக்கலான முதலீட்டு வழிகளுக்கிடையில், தங்கம் என்பது சாதாரண மக்களுக்கு எளிமையான முதலீட்டு தேர்வாக இருந்து வருகிறது. பெரும்பாலானோர் தங்கத்தை நகை வடிவில் சேமிப்பு அல்லது அவசர தேவைக்கான நிதி ஆதாரமாகவே கருதுகிறார்கள். ஆனால் தற்போது தங்கத்தின் விலை திடீரென உயர்வதை பார்த்து மக்கள் தினந்தோறும் ஆச்சரியத்தில் உள்ளனர்.
சமீப காலமாக சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக 4 நாட்களுக்கு கீழ்மட்டத்தில் இருந்த தங்கம் விலை, நேற்று மற்றும் இன்று திடீரென அதிகரிப்பை சந்தித்துள்ளது. கடந்த சில நாள்களாக ஏற்பட்ட இழப்புகள் இந்த இரு நாளில் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், தற்போது தங்கம் வாங்க வேண்டுமா இல்லையா என்பது பெரும்பாலானவர்களின் சந்தேகமாகத் தெரிகிறது.
பொதுவாக பொருளாதாரத்துக்கு மந்தநிலை ஏற்பட்டால் தங்கம் மதிப்பு உயரும். ஆனால் தற்போது நிலவரம் எதிர்மறையான முறையில் நடக்கிறது. பங்குச் சந்தை, கிரிப்டோ போன்ற முதலீடுகள் பாதிப்பை சந்திக்கத் துவங்கிய நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று லாபத்தை உறுதி செய்யத் தொடங்கினர். இதுவே தங்க விலையை சிறிது நாட்களுக்கு குறைத்தது. ஆனால் நேற்று முதல் மீண்டும் அதன் விலை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. ஏன் இந்த மாற்றம் ஏற்பட்டது என்பதை புரிந்துகொள்வதே, இப்போது தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்க உதவும்.
Comments