top of page

பூமியை தாக்க இருக்கும் சிறுகோள்

Custom alt text

பூமிக்குள் வசிக்கும் மக்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பூமிக்கு ஒரு பிரச்சனை என்று சொன்னால் அனைவரும் பதைபதைக்க தான் செய்கின்றார்கள்.  பூமிக்கு இது மற்றும் ஒரு பயங்கரமான தருணமாக இருக்கும் என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.  நாசா வெளியிட்டுள்ள தகவலில் சிறுகோள் ஒன்று நமது கிரகத்திற்கு ஆபத்தான முறையில் நெருங்கி வருகின்றது என்று கூறியுள்ளது. 

 நமது கிரகத்தை தாக்கி எந்த அழிவையும் ஏற்படுத்தாத சிறு கோள்கள் பூமியை தொடர்ந்து நெருங்கி வந்திருந்தாலும்,  சமீபத்தில் பூமிக்கு எதிரான ஒரு சிறு கோள் தாக்குதல் பதிவு செய்யப்பட்டுள்ளது.  சிறுகோள் 2022 EB5 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறு கோள் பூமியை  தாக்கியிருந்தாலும்,  பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.  இந்த சிறு கோள் பூமியின் சுற்று வட்டத்திற்குள் நுழைந்து கிரீன்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட கடற்கரையில் தரை இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் அடுத்து பூமியை கடக்க போகும் புதிய சிறுகோள், பூமிக்கு மிக அருகில் வரப் போகின்றது என்றும் அது நிலைமையை மோசமாக்கும் வகையில் மாற வாய்ப்புள்ளது என்று நாசா விண்வெளி மையம் எச்சரித்துள்ளது.  இந்த சிறுகோள் 2022 GG2  என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பூமிக்கு 4,53,000 மைல்கள் அருகில் வரப்போகின்றது.  இதன் எண்ணிக்கையை பார்க்கும்பொழுது சராசரி மனிதனின் கண்ணுக்கு இது எவ்வளவு பெரிய தூரம் என்று மலைக்கத் தோன்றும்.  ஆனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கண்களில் வானவியல் அலகுகளின் அடிப்படையில் இது மிகக் குறுகிய தூரம் என்று எண்ணுவர்.  நமது பூமிக்கும் இந்தப் பெரிய சிறுகோள் பயணிக்கும் சுற்றுப்பாதைக்கும் மத்தியில் வெறும் 5 லட்சம் மைல்கள்தான் இருக்கின்றது. 

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் கூற்றுபடி 2022 GG 2 என்ற சிறுகோள் 18 அடி அகலம் கொண்டது.  இது பூமியின் வளிமண்டலத்தில் அழிக்கப்படுவதைத் தவிர்க்க போதுமானதாக உள்ளது மற்றும் அதன் மேற்பரப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு பெரியதாக உள்ளது.  எதிர்பாராத சூழ்நிலையில் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டால், இது ஒரு ஆபத்தான நிகழ்வாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.  இதன் பாதையில் ஏதேனும் இடர்கள் குறுக்கே வந்து, சிறுகோள்  செல்லும் திசையை பூமி நோக்கி மாற்றிவிட்டால் அந்த அசம்பாவிதம் நிகழும் வாய்ப்பு உள்ளது.  ஆயினும் அது எந்த பூகம்பம் மற்றும் சுனாமியை தூண்டாது என்றும் நாசா தெரிவித்துள்ளது.  விளைவுகள் பெரிதாக இல்லை என்றாலும்  இதன் தாக்கம் காற்றில் ஒரு அதிர்ச்சி அலையை உருவாக்கும். அது பெரிய தூரம் வரை கேட்கும் என்று நாசா கூறியுள்ளது.

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

"சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், நேரடி வானொலி / Broadcast நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து புதுப்பித்த தகவல்களைப் பெற, எங்கள் செய்தி மின்னிதழில் இணையுங்கள் — பிரத்தியேக உள்ளடக்கங்களும் உங்களுக்காக காத்திருக்கின்றன!"

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page