top of page

பைடனின் பிள்ளைகளின் பாதுகாப்பு நிறுத்தம்


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு சேவையை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீக்கியுள்ளார்.


55 வயதான ஹண்டர் பைடன் மற்றும் 43 வயதான ஆஷ்லி பைடன் ஆகியோா் 30க்கும் மேற்பட்ட இரகசிய சேவை முகவர்களைப் பயன்படுத்தி வந்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் டொனால்ட் ரம்ப்பிடம் கேள்வி எழுப்பிய சில மணி நேரங்களுக்குள் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


ஹண்டர் பைடன் 18 பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் வெளிநாட்டிற்கான பயணத்தில் ஈடுபட்டமை தொடா்பில் தனக்கு தெரியாது எனவும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் ட்ரம்ப் மேலும் தொிவித்துள்ளாா்.

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கியப் படைப்புகள், ஆடியோ புத்தகங்கள் மற்றும் நேரடி வானொலி நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள். பிரத்தியேக உள்ளடக்கத்திற்கு எங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page