இவர்களை காக்கவில்லை எனில்… உலகம் பசியால். அழிந்துபோகும்…
- minnalparithi
- Apr 25, 2023
- 1 min read
இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்…!!
இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!
இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!!
இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்…!!
இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்…!!
இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்…!!
எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும்
பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை….!!
விளைவித்தவன்
பிச்சைக்காரன்…!!
விலை வைத்தவன்
இலட்சக்காரன்…!!










Comments