PM Modi - Man Ki Bath
- minnalparithi
- 4 days ago
- 1 min read

பிரதமர் நரேந்திர மோடி தனது "மன் கி பாத்" நிகழ்ச்சியில் இந்திய விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு முயற்சிகளை பாராட்டினார். தேசிய தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனைகளை முறியடித்த குரிந்தர் வீர்சிங் மற்றும் அனிமேஷ் குஜூர் ஆகியோருடன் உரையாடிய அவர், இந்திய இளைஞர்களின் திறமையைப் புகழ்ந்தார்.
கோடை காலத்தில் பாரம்பரிய இந்திய பானங்களான நீர் மோர், பானகம், சத்து சர்பத், ஆம்பண்ணா போன்றவற்றை மக்களிடம் பரிந்துரைத்தார். இந்தியாவின் பல்வேறு மாம்பழ வகைகளையும் விவசாயிகளின் பங்களிப்பையும் சிறப்பித்தார்.
நெதர்லாந்தில் இருந்து சோழர் கால செப்பேடுகள் இந்தியாவிற்கு திரும்பியதை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகக் குறிப்பிட்ட அவர், சோழப் பேரரசின் கடல்சார் வலிமை மற்றும் பண்பாட்டு மரபை நினைவுகூர்ந்தார்.
கேரளாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நீச்சல் கற்றுத்தரும் சாஜி வலசேரில், கங்கை டால்பின்களை மீட்கும் சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை, நதிகளை சுத்தப்படுத்தும் இளைஞர்கள் மற்றும் தண்ணீர் வசதிக்காக பாடுபடும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் பணிகளையும் பாராட்டினார்.
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வியாளர் கிரிஜா அம்மாள் மாணவர்களிடம் தினமும் ஒரு ரூபாய் சேகரித்து ராணுவ வீரர்களுக்காக ரூ.40 லட்சம் நிதி திரட்டிய முயற்சியையும் பிரதமர் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
"சமூக நலனுக்காக செயல்படும் சாதாரண மனிதர்களே நாட்டின் உண்மையான பலம்" என்று வலியுறுத்திய பிரதமர், இளைஞர்கள் அறிவியல், வானியல் மற்றும் சமூக சேவைகளில் அதிகம் ஈடுபட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.









Comments