top of page

வீட்டிலேயே இனிய சுகப் பிரசவம்.. முகாம் நடத்த திட்டமிட்ட ஹீலர் பாஸ்கர் கைது

Aug 3, 2018
1 min read
Custom alt text

வீட்டிலேயே இனிய பிரசவம் செய்ய பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்தகோவையைச் சேர்ந்த நிஷ்டை என்ற மையத்தின் தலைவரான ஹீலர் பாஸ்கர் கைதுசெய்யப்பட்டார்.

இனிய சுகப் பிரசவம் ஒரு வரம் என்ற பெயரில் மருத்துவமனைக்கு செல்லாமல் பேறுகாலம் பார்க்க பயிற்சியளிப்பதாக வெளியான விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. இதுதொடர்பாக கோவை புதூரில் உள்ள நிஷ்டை மையத்தில் பயிற்சி முகாம் நடப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. Healer Baskar arrested

ஆனால் கோவையில் ஆகஸ்ட் 26ல் வீட்டில் பிரசவம் பார்ப்பதற்காக நடத்தப்படவிருந்த இந்த இலவச பயிற்சி முகாமை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் தற்போது ஹீலர் பாஸ்கரை கோவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மோசடி மற்றும் ஏமாற்ற முயற்சித்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ஹீலர் பாஸ்கரை கோவை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்துள்ளனர்

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

Registered@minnalparithi

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page