top of page

வைகறை சிந்தனை_ ஆனி 7 – மனம் ஒரு குரங்கு

Jun 21, 2021
1 min read

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப் பாவத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும், மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு,

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது, நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது, வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும், கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்,கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்,கடவுள் இருப்பதைக் கருதாமல் ஓடும்.

கலையின் பெயராலே காமவலை வீசும் காசு வருமென்றால் மானம் விலை பேசும் நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும் நிம்மதியில்லாமல் அலைபோல மோதும்.

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

Registered@minnalparithi

bottom of page