top of page

நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ?

Jun 19, 2018
1 min read

தேடிச் சோறுநிதந் தின்று — பலசின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்வாடித் துன்பமிக உழன்று — பிறர்வாடப் பலசெயல்கள் செய்து — நரைகூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பலவேடிக்கை மனிதரைப் போலே — நான்வீழ்வே னன்றுநினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை நேரே இன்றெனக்குத் தருவாய் — என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் — இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி என்னைப் புதிய வுயிராக்கி-எனக் கேதுங் கவலையறச் செய்து — மதி தன்னை மிகத்தெளிவு செய்து — என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.

Custom alt text

– பாரதியார்



Translation

Search for food and eat daily

Gossip around small stories

Feel bad about yourself and worry

Do things which hurt others

Get old and withering

Become a victim of terrible accusations

Did you think I would die at the end;

Like this pathetic human?

I ask for talents

Give them to me today

Shall all my mistakes of the past

Die without a rebirth

I will be a new live being

Make me feel no worries

Make my mind brilliantly sharp

Make me feel bliss and content – forever.

Custom alt text


 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

Registered@minnalparithi

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page