திருவள்ளுவர் ஆண்டு 2051 | புரட்டாசி-14 | 30-09-2020 | புதன்கிழமை | வரலாற்றில் இன்று
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
நிகழ்வுகள்
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
1399 – நான்காம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.
1520 – முதலாம் சுலைமான் உதுமானியப் பேரரசின் சுல்தானாக முடி சூடினார்.
1551 – சப்பானின் ஓஉச்சி வம்சப் படைகள் ஆட்சியாளருக்கு எதிராக புரட்சி நடத்தியதில், நகரத் தலைவர் தற்கொலை செய்து கொண்டார், நகரம் தீக்கிரையானது.
1744 – பிரான்சு, எசுப்பானியாவுடன் இணைந்து சார்தீனியாப் பேரரசைத் தோற்கடித்தது. ஆனாலும் விரைவாகவே பிரான்சு அங்கிருந்து வெளியேறினர்.
1791 – மோட்சார்ட்டின் கடைசி ஆப்பெரா வியென்னாவில் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரங்கேறியது.
1840 – நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
1882 – தாமசு எடிசனின் முதலாவது வணிக நீர்மின் உற்பத்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
1888 – கிழிப்பர் ஜேக் தனது மூன்றாவது, மற்றும் நான்காவது கொலைகளைச் செய்தான்.
1935 – அமெரிக்காவில் அரிசோனா, நெவாடா மாநிலங்களைப் பிரிக்கும் ஊவர் அணை கட்டி முடிக்கப்பட்டது.
1938 – செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை செருமனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்சு, செருமனி, இத்தாலி ஆகியன அதிகாலை 2:00 மணிக்கு கையெழுத்திட்டன. சோவியத் ஒன்றியம், செக்கோசிலவாக்கியா ஆகியன இந்நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை.
1938 – “பொதுமக்களின் இருப்பிடங்கள் மீது வேண்டுமென்றே குண்டுத்தாக்குதல்” நடத்தப்படுவது உலக நாடுகளின் அணியினால் தடை செய்யப்பட்டது.
1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் நாடுகடந்த அரசின் பிரதமராக விளாதிசுலாவ் சிக்கோர்ஸ்கி தெரிவு செய்யப்பட்டார்.
1945 – இங்கிலாந்தில் எர்ட்ஃபோர்ட்சயர் தொடருந்து விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.
1946 – இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நேரடித் தொலைபேசி இணைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.[1]
1947 – பாக்கித்தான் ஐநாவில் இணைந்தது.
1949 – சோவியத்தினரின் தரைவழித் தடையை அடுத்து மேற்கு செருமனிக்கு 2.3 மில்லியன் தொன் உணவுப் பொருட்கள் வான்வெளி மூலமாக அனுப்பப்படுவது முடிவுக்கு வந்தது.
1950 – இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1954 – ஐக்கிய அமெரிக்கா நாட்டிலசு என்ற உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பலை சேவைக்கு விட்டது.
1965 – இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து ஏறத்தாழ 500,000 பேரைக் கொன்று குவித்தார்.
1966 – பெக்குவானாலாந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்து பொட்சுவானா குடியரசு ஆகியது.
1967 – இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1980 – ஈதர்நெட் விவரக்கூற்றுகள் வெளியிடப்பட்டன.
1993 – லாத்தூர் நிலநடுக்கம்: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் லாத்தூர், ஒசுமனாபாத் நகரங்களில் இடம்பெற்ற 6.2 அளவு நிலநடுக்கத்தில் 9,748 பேர் உயிரிழந்தனர்.
1995 – தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திலிருந்து பிரித்து கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1999 – சப்பான் டொக்கைமூரா அணுமின் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
2001 – மத்தியப் பிரதேசம், மைன்புரி மாவட்டத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 8 பேரும் உயிரிழந்தனர்.
2003 – தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.
2005 – சர்ச்சைக்குரிய யிலாண்ட்-போசுரென் முகமது கேலிச்சித்திரம் டென்மார்க் பத்திரிகை ஒன்றில் வெளியானது.
2007 – இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலக வாகையாளர் ஆனார்.
2008 – ராஜஸ்தானில் சாமுண்டா தேவி மலைக்கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 177 பேர் இறந்தனர்.
2009 – சுமாத்திராவை 7.6 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 1,115 பேர் உயிரிழந்தனர்.
2016 – ஆம்ஸ்டர்டம் அருங்காட்சியகத்தில் இருந்து 2002 டிசம்பர் 2 இல் திருடப்பட்ட வின்சென்ட் வான் கோவின் $100 மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஓவியங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன.
Enable Ginger
Cannot connect to Ginger
Check your internet connectionor reload the browser
Disable in this text field
Edit
Edit in Ginger
Edit in Ginger
×









Comments