top of page

காங்கிரஸ் தலைவர் ராகுல் கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்

Jul 31, 2018
1 min read
Custom alt text

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க இன்றுமாலை 4.15 மணி அளவில் சென்னை, காவேரிமருத்துவமனைக்கு வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். சந்தித்தபின்னர் காங்., தலைவர் ராகுல் நிருபர்களிடம் பேசுகையில்; தி.மு.க., தலைவர்கருணாநிதி தமிழ் மக்களின் உணர்வாக விளங்குகிறார். காங்கிரஸ் கட்சிக்கும்,அவருக்கும் இடையிலான நீண்ட கால நட்பு இருந்து வருகிறது. அவரை சந்தித்துஉடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் நலமாக உள்ளார். தமிழக மக்கள் போல்அவர் மிகவும் பலமான மனம் கொண்டவர். அவரது உடல் நலத்தில் முன்னேற்றம்மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதி குறித்து சோனியாவும் விசாரித்ததைதெரிவித்தேன். இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

திமுக தலைவவரை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால்,முதல்வர் பழனிசாமி , அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டபலர் நலம் விசாரித்து வருகின்றனர்.

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

Registered@minnalparithi

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page