top of page

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பெருமிதம்

Apr 11, 2022
1 min read
Custom alt text

   உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ரஷ்ய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  ஆனால்  தலைநகர் கிவ்பைஇன்னும் கைப்பற்ற முடியவில்லை.  ரஷ்யாவின் எந்தவிதமான தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் உக்ரைன் ராணுவத்தினர் எதிர் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பது தான் இதற்கு மிக முக்கிய காரணம்.  உக்ரைன் ராணுவம் மட்டுமல்லாது பொதுமக்களும் போராடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்நிலையில் வரவிருக்கும் வாரம் உக்ரைன் மீதான போரில் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் ரஷ்யா கொடுமைகள் செய்வதில் பெரிய நாடு என்றால், தீரத்திலும் தைரியத்திலும் உக்ரைன் மிகப்பெரிய நாடாக இருக்கின்றது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

© 2025 by Minnal Parithi. All rights reserved.

Registered@minnalparithi

bottom of page