top of page

ஆதார் எண்ணை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்: யுஐடிஏஐ அறிவுரை

Aug 1, 2018
1 min read
Custom alt text

 இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் என, அதனை வழங்கும் அமைப்பான யுஐடிஏஐ கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்: ஆதார் எண்ணை இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு மற்றவர்களுக்கு சவால் விடுப்பதை தவிர்க்க வேண்டும். இது போன்ற செயல்களை ஏற்று கொள்ள முடியாது. இதனை தவிர்ப்பது நல்லது. இத்தகைய செயல்களை செய்ய சட்டத்தில் இடமில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிராய் தலைவர் சர்மா, சமூக வலைதளத்தில் தனது ஆதார் எண்ணை வெளியிட்டு, தனது தகவல்களை வெளியிட முடியுமா என சவால்விடுத்தார். இதன் பின்னர் சில மணி நேரங்களில், சர்மாவின் ஆதார் எண்ணைக் கொண்டு அவரின் மொபைல் எண், மாற்று மொபைல் எண், முகவரி, இமெயில் முகவரி, பிறந்த தேதி, பான் எண், பிறந்த மாநிலம், தற்போது வசிக்கும் வீட்டின் முகவரி உள்ளிட்ட தகவல்களை , ஆன்டர்சன் என்ற ஹேக்கர் வெளியிட்டார். இது பரபரப் பை ஏற்படுத்தியது

 
 
 

Comments


சிறந்த வலைப்பதிவுகள்

Minnal Parithi - online weekly magazine

சமீபத்திய இலக்கிய வெளியீடுகள், ஆடியோ புத்தகங்கள், மற்றும் நேரடி வானொலி / ஒளிபரப்பு நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் அறிய விரும்புகிறீர்களா?

இப்போது எங்கள் செய்தி மின்னிதழில் இணைந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேக கட்டுரைகள், ஆழமான பகுப்பாய்வுகள், மறைக்கப்பட்ட இலக்கிய ரத்தினங்கள், மற்றும் சிறப்பு நிகழ்வு தகவல்கள் — அனைத்தும் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

  • LinkedIn
  • Instagram
  • Facebook
  • X

Registered@minnalparithi

© 2025 by Minnal Parithi. All rights reserved.

bottom of page