அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர்
- minnalparithi
- Apr 9
- 1 min read

தென்கொரிய அதிபர் தேர்தல் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் நீக்கப்பட்டதால் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டு வரும் ஜனநாயகக் கட்சியின் தலைவர். லீ ஜே-முயுங், தமது கட்சித் தலைவர் பதவியை துறந்துள்ளார். தான் பதவி விலகிவிட்டதாக புதன்கிழமை (ஏப்ரல் 9) அறிவித்தார். வேட்பாளராகக் களமிறங்குவது குறித்து அவர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆளும் மக்கள் சக்திக் கட்சி சார்பில் தற்போதைய தொழிலாளர் அமைச்சர் கிம் மூன்-சூ அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார். இந்நிலையில், பதவி விலகியுள்ள திரு லீ, “இப்போது புதிய பணியைத் தொடங்கி உள்ளேன்,” என்று யூடியூப் ஊடகத்தில் நடத்தப்பட்ட கட்சித் தலைமைத்துவக் கூட்டத்தில் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி தரப்பில் அவர் ஒருவரே வலுவான அதிபர் தேர்தல் வேட்பாளர் என்று கருதப்படுகிறது. அதேநேரம், ஆளும் கட்சியில் தற்போதைய சோல் நகர மேயர் உட்பட பலர் உத்தேச வேட்பாளர் பட்டியலில் உள்ளனர்.
Comments